வள்ளுவர் யதார்த்த பிராமணர்!

இத்தனை நூற்றாண்டு காலம் வள்ளுவர் தன்னை இச்சமூகத்தில் நிலைநிறுத்திக்கொண்டது தன்னுடைய இலக்கியப் படைப்பாற்றலினாலும் தனது கருத்துக்களினாலும் ஆகும். சங்க இலக்கியம், காப்பியம் போன்ற பேரிலக்கியங்களின் வரிசையில் தன் ஆளுமையினால் நீங்காத இடம்பிடித்திருந்த வள்ளுவரைப் பற்றி வேஷ சாதியினர் மிக தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு அற்பத்தனமான சில கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தனர். இத்தகைய கண்டுபிடிப்புகள் வள்ளுவர் போன்ற யதார்த்த பிராமணர்களின் இயல்பான பெருமையை நிலைகுலைப்பது கடினமானது அல்லது முடியாத ஒன்றாகும். வள்ளுவரை விளக்குவதில் பண்டிதர் அயோத்திதாசர் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திContinue reading “வள்ளுவர் யதார்த்த பிராமணர்!”

போதி வள்ளுவர் போற்றிய ஆதி புத்தர்!

வள்ளுவர் தாம் இயற்றிய திரிக்குறளின் தெய்வ வாழ்த்தாக அமைத்த முதல் குறளில் புத்தரை “ஆதி பகவன்” என்று போற்றியுள்ளார். பௌத்த இலக்கண நூலான வீரசோழிய உரையில் காணப்படும் புத்தரைக் குறிக்கும் பாடல் ஒன்று “போதி, ஆதி, பாதம் ஓது!” என்றமைந்துள்ளது. இவ்வரியில் புத்தரைக் குறிக்க “ஆதி” என்ற சொல் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். பண்டைய காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி புத்தரை ஆதியங் கடவுள் என்று கூறுகிறது. அப்பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது. “ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை போதியங் கிழவனை பூமிசைContinue reading “போதி வள்ளுவர் போற்றிய ஆதி புத்தர்!”

சாஸ்தாவாகிய அய்யனார் – சிறுகுறிப்பு!

1953 ஆண்டு வெளியான ஒரு சிறுநூலை முன்வைத்து புத்தர் அல்லது சாஸ்தாவின் பெயருக்கு மாற்றுப் பெயராக அய்யனார் என்கிற பெயரும் விளங்கியதை இங்கு கவனத்துக்குட்படுத்த விரும்புகிறேன். “ஸ்ரீகுருநாதர் (சாஸ்தா – அய்யனார் – நாதர்) அஷ்டோத்தர சத – நாம ஸ்தோத்ரம் – நாமாவளி” என்னும் நூல் மேற்குறிப்பிடப்பட்ட ஆண்டில் வெளியானது. D.S. பாலசுப்பிரமணிய சாஸ்த்திரியால் வெளியிடப்பட்ட இந்நூல் குருநாதருக்கு வழங்கும் நூற்றியெட்டு பெயர்களை விளிப்பதைப் பற்றி கூறுகிறது. குருநாதருக்கு சாஸ்தா, அய்யனார், நாதர் ஆகிய மூன்றுContinue reading “சாஸ்தாவாகிய அய்யனார் – சிறுகுறிப்பு!”

புத்தரின் முக்குடை சொல்லும் வரலாறு!

தமிழ்ச் சமூகத்தில் அவைதீக மரபை மாற்றுக்கண்ணோட்டத்தோடு அணுகியவர்களில் முதன்மையானவர் பண்டிதர் அயோத்திதாசர் ஆவார். பௌத்த, சமண மரபுகள் என்று தமிழ்ச் சமூக ஆய்வாளர்கள் பிரித்துப் பார்த்த சூழலில் பண்டிதர் இவற்றைப் “பௌத்த மரபு” என்னும் கண்ணோட்டத்தில் அணுகுவது பௌத்த வரலாற்றியல் ஆய்வில் மிக முக்கியமானதாகும். 1936ஆம் ஆண்டு கிறித்தவமும் தமிழும் என்ற புத்தகத்தை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 1940ஆம் ஆண்டு தனது மிக முக்கியமான “பௌத்தமும் தமிழும்” என்ற நூலை வெளியிட்டார். பல்வேறு சிறப்பம்சங்கள்Continue reading “புத்தரின் முக்குடை சொல்லும் வரலாறு!”

ஏரிக்கு ஒரு பிடாரி ஊருக்கு ஒரு அய்யனார்

இப்பழமொழி பௌத்தத் தெய்வமான பிடாரியை ஏரியின் காவல் தெய்வமாக கூறுவது கவனத்திற்குரியதோடு விழுப்புரம் அருகில் உள்ள பிடாகம் என்னும் ஊரில் வழங்கும் “மழை பெய்தால் தடாகம் இல்லை என்றால் பிடாகம்” என்கிற பழமொழியை நினைவூட்டுகிறது. விழுப்புர பிடாகத்து பழமொழி பிடாரி மழைத்தெய்வம் என்பதை கூறுகிறது. ஏரி என்கிற நீர்நிலையைக் காக்கும் தெய்வமாக பிடாரி செயல்படுகிறாள். ஏரிக்கு ஒரு பிடாரி ஊருக்கு ஒரு அய்யனார் என்ற பழபொழியில் பிடாரி, அய்யனார் என்ற இரு தெய்வங்கள் இடம்பெறுகின்றன என்றாலும் ஏரியைக்Continue reading “ஏரிக்கு ஒரு பிடாரி ஊருக்கு ஒரு அய்யனார்”

கல்லாத்தி புத்தர்!

பண்ருட்டி – திருவதிகை – வீராட்டனேஸ்வரர் கோயிலில் இருக்கும் புத்தர் சிலை தொடர்பாக வெளிவரவிருக்கும் நண்பர் அருள் முத்துக்குமரனின் ஆய்வுக்கட்டுரைக்காக காத்திருக்கிறேன். எனவே, இச்சிலையைப் பற்றிய வரலாற்றை விரிவாக ஆராயமல் சுருக்கமாக கூறுகிறேன். 156 செ.மீ. உயரமும் 80 செ.மீ. அகலமும் கொண்டுள்ளது இப்புத்தர்சிலை. தமிழகத்தில் இருக்கும் புத்தர் சிலைகளுள் மிகவும் குதிப்பிடத்தகுந்தது திருவதிகை புத்தர்சிலை. தியான நிலையில் உள்ள புத்தர் சிலைகளின் உள்ளங்கையில் அசோக சக்கரம் வழக்கமாக காணப்படும். திருவதிகை புத்தர் சிலையின் உள்ளங்கையில் அசோகContinue reading “கல்லாத்தி புத்தர்!”

சித்தன்னவாசல் பால்குடிக்கும் அய்யனார்!

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலுக்கு நானும் சகோதரர் மணிமாறன் அவர்களும் கள ஆய்வுக்காக சென்றிருந்தோம். இங்குள்ள குன்றில் இரண்டு முக்கியமான விடயங்கள் உள்ளன. ஒன்று குன்றின் உச்சியில் இருக்கும் பள்ளி, மற்றொன்று குன்றின் அடியில் இருக்கும் தமிழ்ச் சமண தீர்த்தங்கரர்கள் வீற்றிருக்கும் தியானமண்டபமும் உலக புகழ்பெற்ற சித்தன்னவாசல் ஓவியமும் ஆகும். சித்தன்னவாசல் வரலாற்றில் பெரிதும் கவனப்படுத்தப்பட்டது இவ்விரண்டுதான். ஆனால், ஆய்வாளர்களால் இதுவரை கவனப்படுத்தப்படாத மற்றொரு விடயம் சித்தன்ன வாசலின் குன்றுக்கு மேற்கே உள்ள பால்குடிக்கும் அய்யனார்Continue reading “சித்தன்னவாசல் பால்குடிக்கும் அய்யனார்!”

Introduce Yourself (Example Post)

This is an example post, originally published as part of Blogging University. Enroll in one of our ten programs, and start your blog right. You’re going to publish a post today. Don’t worry about how your blog looks. Don’t worry if you haven’t given it a name yet, or you’re feeling overwhelmed. Just click theContinue reading “Introduce Yourself (Example Post)”

Design a site like this with WordPress.com
Get started