Be yourself; Everyone else is already taken.
— Oscar Wilde.
This is the first post on my new blog. I’m just getting this new blog going, so stay tuned for more. Subscribe below to get notified when I post new updates.
Be yourself; Everyone else is already taken.
— Oscar Wilde.
This is the first post on my new blog. I’m just getting this new blog going, so stay tuned for more. Subscribe below to get notified when I post new updates.

இத்தனை நூற்றாண்டு காலம் வள்ளுவர் தன்னை இச்சமூகத்தில் நிலைநிறுத்திக்கொண்டது தன்னுடைய இலக்கியப் படைப்பாற்றலினாலும் தனது கருத்துக்களினாலும் ஆகும்.
சங்க இலக்கியம், காப்பியம் போன்ற பேரிலக்கியங்களின் வரிசையில் தன் ஆளுமையினால் நீங்காத இடம்பிடித்திருந்த வள்ளுவரைப் பற்றி வேஷ சாதியினர் மிக தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு அற்பத்தனமான சில கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தனர். இத்தகைய கண்டுபிடிப்புகள் வள்ளுவர் போன்ற யதார்த்த பிராமணர்களின் இயல்பான பெருமையை நிலைகுலைப்பது கடினமானது அல்லது முடியாத ஒன்றாகும்.
வள்ளுவரை விளக்குவதில் பண்டிதர் அயோத்திதாசர் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தார். பண்டிதருக்கு முன்பாக வள்ளுவரை தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டவிதம் பற்றி ஒரு பரிசோதனை முறைக்காக நிகழ்த்தப்படும் இவ்வாய்வு வள்ளுவர் யதார்த்த பிராமணர் என்பதை வெளிப்படுத்தும்.
தொடரும்…
வள்ளுவர் தாம் இயற்றிய திரிக்குறளின் தெய்வ வாழ்த்தாக அமைத்த முதல் குறளில் புத்தரை “ஆதி பகவன்” என்று போற்றியுள்ளார். பௌத்த இலக்கண நூலான வீரசோழிய உரையில் காணப்படும் புத்தரைக் குறிக்கும் பாடல் ஒன்று “போதி, ஆதி, பாதம் ஓது!” என்றமைந்துள்ளது. இவ்வரியில் புத்தரைக் குறிக்க “ஆதி” என்ற சொல் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.
பண்டைய காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி புத்தரை ஆதியங் கடவுள் என்று கூறுகிறது. அப்பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது.
“ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
சோதியஞ் செல்வநின் திருவடி வணங்கினம்”.
இப்பாடல் இவ்வாறு தமிழ் வெர்ட்சுவல் யுனிவர்சிட்டி இணையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்பாடலை எடுத்தாண்டுள்ள மயிலையார் பதிவுசெய்ததில் “அருமறை அருகனை” என்றும் “திருவடி தொழுதனம்” என்றும் காணப்படுகிறது. அருகன் என்பது புத்தரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். இவ்வேறுபாடு ஆராயத்தக்கது.
வீரசோழியத்திலும், யாப்பருங்கல உரையிலும் காணப்படும் புத்தர் பாடல் ஒன்று புத்தரை அவரின் பல்வேறு பெயர்களால் பக்தியுணர்வோடு விளிக்கிறது. அப்பாடல் பின்வருமாறு…
“ஆதி நீஇ ! அமலன் நீஇ !
அயனும் நீஇ ! அரியும் நீஇ !
சோதி நீஇ ! நாதன் நீஇ !
துறைவன் நீஇ ! இறைவன் நீஇ !
அருளும் நீஇ ! பொருளும் நீஇ !
அறிவன் நீஇ ! அநகன் நீஇ !
தெருளும் நீஇ ! திருவும் நீஇ !
செறிவும் நீஇ ! செம்மல் நீஇ !”
இப்பாடலில் ஆதி நீஇ! என்று புத்தர் அழைக்கப்பட்டிருப்பதை அறியலாம்.
எனவே, வள்ளுவன் போற்றிய ஆதி பகவன் என்பது ஆதி புத்தர் என்பதை உணரலாம்.


1953 ஆண்டு வெளியான ஒரு சிறுநூலை முன்வைத்து புத்தர் அல்லது சாஸ்தாவின் பெயருக்கு மாற்றுப் பெயராக அய்யனார் என்கிற பெயரும் விளங்கியதை இங்கு கவனத்துக்குட்படுத்த விரும்புகிறேன்.
“ஸ்ரீகுருநாதர் (சாஸ்தா – அய்யனார் – நாதர்) அஷ்டோத்தர சத – நாம ஸ்தோத்ரம் – நாமாவளி” என்னும் நூல் மேற்குறிப்பிடப்பட்ட ஆண்டில் வெளியானது. D.S. பாலசுப்பிரமணிய சாஸ்த்திரியால் வெளியிடப்பட்ட இந்நூல் குருநாதருக்கு வழங்கும் நூற்றியெட்டு பெயர்களை விளிப்பதைப் பற்றி கூறுகிறது.
குருநாதருக்கு சாஸ்தா, அய்யனார், நாதர் ஆகிய மூன்று பெயர்களும் வழங்குவதை இந்நூலின் தலைப்பின் வழி அறியலாம். சாஸ்தா புத்தரின் பெயர்களில் ஒன்றான பாலிமொழிச் சொல்லாகும். புத்தரை நாதன் என்றும் போதிநாதன் என்றும் போதிமூலத்துநாதன் என்றும் மணிமேகலை கூறுகிறது. ஸந்மார்க்கநாதன் என்று புத்தர் தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறார் என்று உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குருநாதரைக் குறிக்க சாஸ்தா, நாதர் ஆகிய டொற்கள் இடம்பெறும் வரிசையில் அய்யனார் என்ற சொல்லும் இடம்பெறுவதால் புத்தரைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்றாக அய்யனார் என்ற சொல்லும் இடம்பெறுவதை இந்நூலின் வழி அறியலாம். மேலும், குருநாதர் என்ற பெயரும் புத்தரைக் குறிக்கும் என்பதையும் நாம் அறியலாம்.
இந்நூல் எந்தெந்த வர்ணத்தார் குருநாதரை எவ்வாறு அழைக்க வேண்டும், சடங்குகளில் எவ்வாறு கூறவேண்டும் என்று கூறுகிறது.
1. பிராமணன் – ஸ்ரீ குருநாதோ, குருநாதம்
சத்திரியன் – ஸ்ரீ சாஸ்தா, சாஸ்தாரம்
வைசியன் – ஸ்ரீ மதர்யோ, அர்யம் மம
சூத்திரன் – ஸ்ரீ நாதோ, நாதம் மம
மேலும், குருநாதரை ஜபம் செய்யும் போது ஜபே என்றும் அர்ச்சனை செய்யும்போது அர்ச்சனே என்றும் ஹோமகாலத்தில் ஹோமே என்றும் தர்ப்பண காலத்தில் தர்ப்பணே என்றும் அழைக்க வேண்டுமாம்.
அர்ச்சனை, ஹோமம், தர்ப்பணம் இவற்றுள் எதை செய்தாலும் குருநாதரின் பெயர்களை விளித்துக் கூறும்போது ஒவ்வொரு வர்ணத்தாரும் அவரவர்க்கு உரியவற்றை சேர்த்துக் கூறவேண்டுமாம்.
பிராமணன் – ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்
சத்திரியன் – ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்
வைசியன் – ஓம் ஸ்ரீம் க்லீம்
சூத்ரன் – க்லீம் என்று கூற வேண்டுமாம்.
இறுதியாக எல்லா வர்ணத்தாரும் அர்ச்சனை செய்யும்போது நம என்றும் ஹோமம் செய்யும்போது ஸ்வாஹ என்றும் தர்ப்பணம் செய்யும்போது தர்ப்பயாமி என்றும் கூற வேண்டுமாம்.
நாதன், சாஸ்தா ஆகிய சொற்களுக்கு இணையாக அய்யனார் பெயரும் வைக்கப்பட்டுள்ளது என்பதை நூலின் தலைப்பே காட்டுகிறது. புத்தராகிய சாஸ்தாவின் பெயர்களுள் ஒன்றாக அய்யனார் என்ற பெயரும் விளங்கிவந்ததையே இந்நூல் காட்டுகிறது.
இந்நூல் குருநாதரின் பெயரை ஒவ்வொரு வர்ணத்தாரும் எவ்வாறு ஒலிக்க வேண்டும் என்று வரையறுத்திருப்பது வருணாசிரம சிந்தனையின் வெளிப்பாடாகும். இவற்றைக் கடந்து இந்நூல் அய்யனார் என்பது புத்தரின் பெயர்களில் ஒன்று என்பதை பதிவுசெய்துள்ளது மிக முக்கியமான குறிப்பாகும்.

தமிழ்ச் சமூகத்தில் அவைதீக மரபை மாற்றுக்கண்ணோட்டத்தோடு அணுகியவர்களில் முதன்மையானவர் பண்டிதர் அயோத்திதாசர் ஆவார். பௌத்த, சமண மரபுகள் என்று தமிழ்ச் சமூக ஆய்வாளர்கள் பிரித்துப் பார்த்த சூழலில் பண்டிதர் இவற்றைப் “பௌத்த மரபு” என்னும் கண்ணோட்டத்தில் அணுகுவது பௌத்த வரலாற்றியல் ஆய்வில் மிக முக்கியமானதாகும்.
1936ஆம் ஆண்டு கிறித்தவமும் தமிழும் என்ற புத்தகத்தை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 1940ஆம் ஆண்டு தனது மிக முக்கியமான “பௌத்தமும் தமிழும்” என்ற நூலை வெளியிட்டார். பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்நூலில் மயிலையார் சமணம் என்பது அனைத்து சமய துறவிகளையும் குறிக்கும் பொது சொல் என்கிறார். அதாவது சமணம் என்பது தனி மதத்தை மட்டுமே குறிக்கும் சொல்லாக பார்க்கப்பட்டு வந்த சூழலில் அச்சொல்லுக்கு இருக்கும் மற்றொரு பரிமாணத்தையும் எடுத்துக்காட்டியுள்ளார்.
அவைதீக மரபைப் பற்றி ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் அத்துறையில் முன்னோடி அறிஞர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுவதில்லை என்பதை ஆய்வுக் குறைபாடாகவோ அல்லது தாங்களே சாதிய சாயம் பூசிக்கொள்பவர்களாக திகழ்கிறார்கள் என்பதாகவோ புரிந்துகொள்ளலாம்.
தமிழ்ச் சமூகத்தில் சிலைகளைப் பற்றி ஆய்வை மேற்கொள்பவர்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட விதிமுறைகளையே பின்பற்றுகிறார்கள், அது சமூகத்தில் தங்களுக்கான சமூக இருப்பில் வசதியாக இருப்பதையும் உணர்கிறார்கள் அல்லது தாங்கள் வரையறுத்துக்கொண்ட விதிமுறைகளை சாதிய சட்டகத்துக்குள் வைத்துக்கொண்டு பௌத்தத்தைத் தங்களின் விடுதலை கருவியாகப் பார்க்கும் தலித்துகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடுகின்றனர்.
இங்கு தார்வாடில் உள்ள கர்நாடகப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் R.C. ஹிரேமத் அவர்கள் எழுதிய Buddhism in Karnataka (முதல் பதிப்பு 1994, இரண்டாம் பதிப்பு 2002) என்னும் நூலின் அட்டையில் இடம்பெற்றுள்ள புத்தரின் படம் நம் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. மேலும், இப்படம் பௌத்த ஆய்வியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இப்படத்தை நன்கு உற்று கவனிக்கும்போது நமக்கு சில புரிதல்கள் ஏற்படக்கூடும்.
புத்தர் சிலையையும் தீர்த்தங்கரர் சிலையையும் வேறுபடுத்திப் பார்க்கும்போது ஆய்வாளர்கள் வகுக்கப்பட்ட விதிமுறைகளைக் கையாள்கின்றனர்.
1. சீவராடை அணிந்திருந்தால் புத்தர், இல்லையென்றால் தீர்த்தங்கரர் – என்பது அவ்விதிமுறைகளில் ஒன்றாகும்.
2. இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ சிலைகள் சிதைவுற்ற நிலையில் இருக்கும்போது சீவராடை உள்ளதா இல்லையா என்று தெளிவாக தெரியாதபொழுது, சிலையின் தலைக்கு மேலே காணப்படும் முக்குடையை (மூன்றடுக்கு) அடிப்படையாக கொண்டு அது புத்தர் சிலை இல்லை என்றும், அது தீர்த்தங்கரர் சிலை என்றும் முடிவுக்கு வருகின்றனர்.
இதிலிருந்து முக்குடை இருந்தால் தீர்த்தங்கரர் என்று முடிவுக்கு வருவதன் மூலம் அது புத்தர் சிலை இல்லை என்று நிராகரிக்கின்றனர். இங்குதான் டாக்டர் ஹிரேமத்தின் நூலின் அட்டையில் முக்குடையை சுமந்துள்ள புத்தர் நம் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளார்.
இப்படத்தை உற்று கவனித்தால் முக்குடை இருப்பதோடு மட்டும் இல்லாமல் சீவராடை இருப்பதையும் அறியமுடியும். விதிமுறையின்படி தீர்த்தங்கரருக்கு சீவராடை இல்லை என்பதை நினைவில்கொள்ள வேண்டும். மேலும் புத்தருக்குப் பின்னால் அமைந்திருக்கும் வட்டம் தீர்த்தங்கரருக்கும் உண்டு என்றாலும், இச்சிலையில் அசோக சக்கரத்தை நினைவுறுத்தும் வகையில் பூவேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ளதைப் படத்தில் காணமுடியும்.
பௌத்தத்தின் மீது பெரும் நாசகார வேலையை நிகழ்த்தி அதை வீழ்ச்சியடைந்த மதமாக குறிக்கும் வரலாற்றுப் போக்கில் இச்சிலை வரலாற்றை நேர்செய்யும் ஆயுதமாகவே விளங்குகிறது.
கர்நாடக மாநிலத்தில் ஐஹோலில் உள்ள இச்சிலையே இப்புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சிலை உள்ள ஐஹோல் என்னும் இடம் ஐவள்ளி, ஆர்யபுரம் எனவும் அழைக்கப்பெறுமாம். இந்திய மொழிமரபில் இந்தோ – ஆரிய மொழிகளில் பகரமாக இருப்பது திராவிட மொழிகளில் வகரமாக பயன்படுத்தப்படும். இதற்கு பங்காள தேசம் என்பதை தமிழில் வங்காளதேசம் என்று கூறுவதை உதாரணாமாக கொள்ளலாம். எனவே ஐபள்ளி என்றிருந்ததையே ஐவள்ளி என்றழைத்துள்ளனர் எனலாம். ஐபள்ளி என்பதன் பொருளை அய்யன் அல்லது ஐயன் புத்தர் வீற்றிருக்கும் பள்ளி அல்லது விகார் என்று பொருள்கொள்ளலாம்.
மேலும் பௌத்த தெய்வங்கள் ஆர்ய தேவர் என்றும் ஆர்ய தேவி என்றும் அழைக்கப்படுவதை நினைவில் கொண்டால் ஐஹோலின் மற்றொரு பெயரான ஆர்யபுரம் பௌத்தத்தின்பாற்பட்டு அமைவதை அறிய முடியும்.
எனவே, முக்குடை பௌத்த மார்க்கத்திற்கும் உரியது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். மேலும் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் சமணம் பொதுசொல்லாக அனைத்து மத துறவிகளையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்று கூறுவதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தீர்த்தங்கரரின் சிலையும், புத்தரின் சிலையும் மக்களால் புத்தர் என்றே குறிக்கப்பெறுவதை ஆய்வாளர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். விருத்தாசலம் பகுதியில் உள்ள எடையூர் என்னும் ஊரில் உள்ள இரண்டு தீர்த்தங்கரரின் சிலைகள் அங்குள்ள மக்களால் புத்தர் சிலை என்றே குறிக்கப்பெறுகிறது. இதை ஆய்வாளர்கள் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. மேலும் இச்சிலைகள் தலித்துகள் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு சாதி இந்துக்கள் வசிக்கும் கோயிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன என்கிற அடிப்படைத் தகவலைக்கூட ஆய்வாளர்கள் எழுத மறுக்கின்றனர் அல்லது இப்பரப்பில் ஆய்வை மேற்கொள்ளும்போது வசதியாகவே சாதிய சமூக அமைப்பை மறந்துவிட்டு பெயரளவில் அது தீர்த்தங்கரர் என்று மட்டுமே குறிக்கின்றனர். இங்கு தீர்த்தங்கரர் சிலையை மக்கள் புத்தர் என்று அழைப்பது அறியாமையின் வெளிப்பாடு என்று ஆய்வாளர்கள் நினைத்தால், அது மக்களின் அறியாமை அல்ல ஆய்வாளர்களின் அறியாமையாகவே கொள்ள வேண்டும்.
பொதுசொல்லாக சமணம் இருப்பதைப் போல கேரளாவில் இந்து மதத்தை தவிர்த்து மற்ற ஏனைய மதங்கள் அனைத்துக்கும் “பௌத்த மார்க்கம்” என்பது பொது சொல்லாடலாக இருந்ததைப் பற்றி மிக விரிவாக அலெக்ஸாண்டர் தனது கேரளாவில் பௌத்தம் என்ற நூலில் எழுதியுள்ளார். அதாவது பௌத்தம், ஜைனம், இஸ்லாம், கிறித்தவம் ஆகிய மதங்களைக் குறிக்க “பௌத்த மார்க்கம்” என்ற சொல்லாடலே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதைப் போலவே தமிழகத்தில் மக்கள் தீர்த்தங்கரர் சிலையையும் புத்தர் சிலையையும் குறிக்க புத்தர் என்ற பொது சொல்லையே பயன்படுத்துகின்றனர் என்று நாம் அறிந்துகொள்ளலாம்.
பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் இடையே உள்ள மிக நெருக்கமான உறவை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். ஜைனம் என்பதன் தமிழ் வடிவமே சமணம் என்று கூறுவதையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமோ என்று தோன்றுகிறது. சமணர்கள் அமணர்களாக இருப்பதினால் நேரடியாக குறிப்பிடாமல் மங்கல வழக்காக மாற்றி சமணர்கள் என்று கூறுகின்றனர் என்கிற கருத்தை கவனத்தில் கொண்டால் ஜைனர்களில் இருபெரும் பிரிவாக உள்ள சுவேதம்பரர், திகம்பரர் (திசையையே ஆடையாக உடுத்திக்கொள்ளும் அமணர் என்னும் சமணர்) என்பவர்களில் சமணம் என்பது ஜைனம் முழுவதையும் குறிக்காமல் ஜைனத்தில் ஒரு பிரிவை மட்டுமே குறிக்கக்கூடிய சொல்லாக விளங்குவதை அறியலாம்.
மேலும் கடலூர், விழுப்புர மாவட்டம் போன்ற தமிழகத்தின் வட மாவட்டங்களில் கால்களை மடித்து அமர்வதற்குக் கூறப்படும் சப்பலாங்கோடு என்கிற சொல்லை சமணம் என்ற சொல்லோடு இணைத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அதாவது சப்பலாங்கோடு அல்லது சம்மணங்கோடு என்று வழக்கில் கூறுவதை சமணம் என்பதோடு இணைத்துப் பார்த்தால் புத்தர், தீர்த்தங்கரர்கள் தங்களுடைய கால்களை மடித்து அமர்ந்து தியான நிலையில் சம்மணங்கோடு முறையில் இருந்து சிறப்பு பெற்றதால் இவர்கள் சமணர்கள் என்றும் அழைக்கப்பெற்றிருக்கலாம். இங்கு மயிலை சீனி. வேங்கடசாமி சமணம் பொதுசொல் என்று குறிப்பிடுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதைப் போலவே அருகன் என்பது சமணக்கடவுளைக் குறிக்கும் என்று கூறும் கருத்தையும் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். பாண்டிச்சேரியில் உள்ள அரிக்கன்மேடு என்பதை அருகன்மேடு என்ற வடிவம் கொண்டு A. ராமசுவாமி தனது History of Pondichery என்னும் நூலில் ‘ஜின மலை அல்லது புத்தர் மலை’ என்று பொருள்கொள்கிறார். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் சிலையை அடிப்படையாக கொண்டு D.C. அஹிர் தனது Buddhism in South India என்ற நூலில் அருகன்மேடு என்பது ‘புத்தர் மலை’யே என்று அழுத்தமாக வலியிறுத்துகிறார். மேலும், புத்தர் சிலை இருக்கும் சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் என்னும் ஊர்ப்பெயரையும் வீரம்+அருகனூர் என்று பொருள்கொண்டால் அருகன் புத்தரைக் குறிப்பதை அறியமுடியும்.
பௌத்தத்திற்கும் தமிழ்ச் சமணத்திற்கும் இடையே மிக நெருக்கமான உறவு உள்ளது என்பதற்கு சமணம், பௌத்த மார்க்கம், புத்தர், அருகன் ஆகிய சொற்கள் சாட்சியாக உள்ளன. வெறும் முக்குடையை அடிப்படையாக வைத்துக்கொண்டு இது தீர்த்தங்கரர், இது புத்தர் இல்லை என்று கூறும் அளவுகோலை ஐஹோல் அல்லது ஐபள்ளி அல்லது ஆர்யபுரத்தின் முக்குடை சுமந்த புத்தரை சிலை புறந்தள்ளிவிடுகிறது. இச்சிலை பௌத்த சிற்பவியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப்பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இச்சிலையை அடிப்படை சான்றாக கொண்டு புத்தரை முக்குடைப் புத்தர் என்றே அழைக்கலாம்.

இப்பழமொழி பௌத்தத் தெய்வமான பிடாரியை ஏரியின் காவல் தெய்வமாக கூறுவது கவனத்திற்குரியதோடு விழுப்புரம் அருகில் உள்ள பிடாகம் என்னும் ஊரில் வழங்கும் “மழை பெய்தால் தடாகம் இல்லை என்றால் பிடாகம்” என்கிற பழமொழியை நினைவூட்டுகிறது. விழுப்புர பிடாகத்து பழமொழி பிடாரி மழைத்தெய்வம் என்பதை கூறுகிறது. ஏரி என்கிற நீர்நிலையைக் காக்கும் தெய்வமாக பிடாரி செயல்படுகிறாள்.
ஏரிக்கு ஒரு பிடாரி ஊருக்கு ஒரு அய்யனார் என்ற பழபொழியில் பிடாரி, அய்யனார் என்ற இரு தெய்வங்கள் இடம்பெறுகின்றன என்றாலும் ஏரியைக் காக்கும், மழை வெள்ளத்திலிருந்து காக்கும் பிடாரியின் வேலை அய்யனாருக்கும் உண்டு என்பதை நாம் அறிகிறோம்.
அதாவது ஏரியின் தெய்வமாக அல்லது நீர்நிலைகளின் தெய்வமாக அய்யனார் விளங்குகிறார். திருவெண்ணெய் நல்லூரில் அய்யனாருக்கு ஏரிக்கரை அய்யனார் என்றே வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுனைகாத்த அய்யனார் உண்டு. விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்கூடலில் இவர் வெள்ளங்காத்த அய்யனார் என்றே அழைக்கப்படுகிறார். அய்யனார் பொதுவாக நீர்நிலைகள் ஓரம் அமைக்கப்பட்டிருப்பதை தமிழம அறிந்த ஒன்றுதான். போர்வீரனாகவும் காவல் தெய்வமாகவும் விளங்கிய அய்யனார் மணிமேகலை காப்பியம் கூறும் பகவான் இந்திரனைப் போல நீர்த்தெய்வமாக விளங்குகிறது.
படம் – வெள்ளங்காத்த அய்யனார், இடம் – விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்கூடல்
பண்ருட்டி – திருவதிகை – வீராட்டனேஸ்வரர் கோயிலில் இருக்கும் புத்தர் சிலை தொடர்பாக வெளிவரவிருக்கும் நண்பர் அருள் முத்துக்குமரனின் ஆய்வுக்கட்டுரைக்காக காத்திருக்கிறேன். எனவே, இச்சிலையைப் பற்றிய வரலாற்றை விரிவாக ஆராயமல் சுருக்கமாக கூறுகிறேன்.
156 செ.மீ. உயரமும் 80 செ.மீ. அகலமும் கொண்டுள்ளது இப்புத்தர்சிலை. தமிழகத்தில் இருக்கும் புத்தர் சிலைகளுள் மிகவும் குதிப்பிடத்தகுந்தது திருவதிகை புத்தர்சிலை.
தியான நிலையில் உள்ள புத்தர் சிலைகளின் உள்ளங்கையில் அசோக சக்கரம் வழக்கமாக காணப்படும். திருவதிகை புத்தர் சிலையின் உள்ளங்கையில் அசோக சக்கரம் காணப்படுவதோடு மட்டும் இல்லாமல் அரச இலையும் காணப்படுகிறது.
புத்தர் அரச மரத்தடியில் ஞானமடைந்தார் என்பதனால் அரசமரத்துக்குப் போதிமரம் என்ற சிறப்புப்பெயர் உண்டு. போதிமரம் என்பது மட்டும் இல்லாமல் அரசமரம் என்பதுவும் சிறப்புப் பெயரே ஆகும் என்பதை பண்டிதர் அயோத்திதாசரின் எழுத்துக்களின் வழி நாம் அறியலாம்.
அரசமரத்திற்குத் தமிழ்மொழியில் கல்லாத்தி மரம் என்று பெயர். ஔவையார் எழுதிய ஆத்திசூடிக்கு விளக்கம் தரும் பண்டிதர் அயோத்திதாசர் ஆத்தி என்பது அரசமரத்தைக் குறிக்கும், இதன் அடிப்படையில் ஆத்திசூடி என்பது ஆத்திப்பூவை சூடிய புத்தரைக் குறிக்கும் என்று விளக்கம் தருகிறார். எனவே, கல்லாத்தி மரத்தின் அடியில் அரசன் புத்தர் அமர்ந்து ஞானம் பெற்றதால் இம்மரம் அரசமரம் என்று பெயர் பெற்றுள்ளது என்பதை நாம் இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
தமிழ்ச்சமூகத்தில் புத்தரின் போதிமரம் ஆத்தி (கல்லாத்தி – ஆத்திசூடி) என்று சிறப்பாக வழங்கப்பட்டதை பௌத்த பிக்குணி ஔவையின் வழி அறியலாம். திருவதிகை புத்தர் சிலையின் கையில் அரச இலை சிறப்பாக உள்ளதால் இச்சிலையைக் ‘கல்லாத்தி புத்தர்’ என்று சிறப்பாக அழைக்க வேண்டும் என்று மனசுக்குள் தோன்றியது.
நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நண்பரின் கட்டுரை வெளிவந்த பிறகு திருவதிகை புத்தரையும் கேரளாவில் கோட்டயத்திற்கு அருகில் உள்ள நிலம்பேரூர், கிளிரூர் ஆகிய இடங்களில் உள்ள புத்தர்சிலைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் திருவதிகை கல்லாத்தி புத்தரின் வரலாற்றைப் புரிந்துகொள்ளலாம் என்று எண்ணுகிறேன் (இதை பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்).

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலுக்கு நானும் சகோதரர் மணிமாறன் அவர்களும் கள ஆய்வுக்காக சென்றிருந்தோம். இங்குள்ள குன்றில் இரண்டு முக்கியமான விடயங்கள் உள்ளன. ஒன்று குன்றின் உச்சியில் இருக்கும் பள்ளி, மற்றொன்று குன்றின் அடியில் இருக்கும் தமிழ்ச் சமண தீர்த்தங்கரர்கள் வீற்றிருக்கும் தியானமண்டபமும் உலக புகழ்பெற்ற சித்தன்னவாசல் ஓவியமும் ஆகும். சித்தன்னவாசல் வரலாற்றில் பெரிதும் கவனப்படுத்தப்பட்டது இவ்விரண்டுதான்.
ஆனால், ஆய்வாளர்களால் இதுவரை கவனப்படுத்தப்படாத மற்றொரு விடயம் சித்தன்ன வாசலின் குன்றுக்கு மேற்கே உள்ள பால்குடிக்கும் அய்யனார் சிலைதான். ஆயிரம் ஆண்டு பழமையானது என்று மதிக்கத்தகும் இவ்வய்யனார் சிலையை இவ்வூர் மக்கள் பால்குடிக்கும் அய்யனார் என்றே அழைக்கின்றனர்.
மேற்குத் திசையில் குன்றின் அடிவாரத்தில் ஒரு அய்யனார் கோவிலும் பால்குடிக்கும் அய்யனாரும் என இரண்டு அய்யனார்கள் இங்கு உள்ளனர். பால்குடிக்கும் அய்யனார் சிலையும் அதனுடன் அருகில் வைக்கப்பட்டிருக்கும் பெண்தெய்வ சிலையும் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு இப்பொழுது தனி இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு அய்யனார்களும் அருகருகே உள்ளனர். தனித்தனியே இவை வழிபடப்படுகின்றன.
பால்குடிக்கும் அய்யனாரைப்பற்றி இவ்வூர் மக்கள் கூறும் கதை மிக முக்கியமானதாகும். தினமும் அதிகாலையில் பால்விற்கும் ஒருவர் ஒருநாள் பக்கத்து ஊருக்கு விற்க செல்லும்போது ஓரிடத்தில் பால்பாத்திரம் கவிழ்ந்து விழுந்து பால் முழுவதும் கொட்டிவிடுகிறது. பிறகு தினந்தோறும் அவர் பால்விற்க செல்லும்போது முதல்நாள் பால்கொட்டிய இடத்திலேயே பால்கொட்டியுள்ளது. ஒருநாள் இரண்டு நாள் என்றால் தவறி விழுந்துவிட்டது என்று நினைக்கலாம், தினமும் கொட்டுகிறது, அதுவும் கொட்டிய இடத்திலேயே பால்கொட்டுகிறது, இது என்னடா இது, இதை கண்டுபிடித்தாக வேண்டும் என்று பால்காரர் எண்ணினார். இச்செய்தி ஊரெல்லாம் பரவியது. அடுத்த நாள் காலையில் பாலெடுத்து செல்லும்போது மீண்டும் அந்த இடத்தில் கொட்டிவிடவே அந்த பால் எங்கே செல்கிறது என்று பார்க்கத் தொடங்கினார். பால் முழுவதும் ஒரு குழிக்குள் செல்லுவதைப் பார்த்த அவர் அந்த இடத்தை கடைப்பாறையால் தோண்டிபார்த்தபோது அங்கு அய்யனார் சிலை இருந்தது. அந்த சிலையை எடுத்துவைத்து வழிபடத்தொடங்கிய அவ்வூர் மக்கள் இச்சிலையைப் பால்குடிக்கும் அய்யனார் என்று அழைத்து பால் ஊற்றி வழிபட்டு வந்தனர். இவ்வாறு இந்த கதை அமைகிறது.
சித்தன்னவாசலில் மக்கள் கூறும் கதையைப் புரிந்துகொள்ளுவதற்கு இங்கு மயிலை சீனி. வேங்கடசாமி காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சி அம்மன் கோயிலைப் பற்றி கூறும் செய்தி மிக முக்கியமானதாக எண்ணுகிறேன். காஞ்சி காமாட்சியம்மன் கோயில் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்றும் இக்கோயில் பிற்காலத்தில் இந்துமதக் கோயிலாக மாற்றப்பட்டது என்றும் அரசாங்க சிலாசாசன ஆராய்ச்சியாளர்களே கூறுவதாக கூறுகிறார். இக்கோயிலில் ஐந்தாறு புத்தர் சிலைகள் இன்றைக்கும் காணப்படுகின்றன என்று அவர் 1940ல் கூறுகிறார். இச்சிலைகளில் பெரியதாகவும் நின்றநிலையில் இருக்கும் புத்தர்சிலை இக்கோயில் உட்பிரகாரத்திலேயே இருக்கிறது என்று கூறும் மயிலையார் இச்சிலைக்கு இப்பொழுது ‘சாத்தன்’ (சாஸ்தா) என்று வழங்குவதாக குறிப்பிடுகிறார். இத்தோடு இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது மயிலையார் காஞ்சி காமாட்சி அம்மனைப் பற்றிய “காமாட்சி லீலாப் பிரபாவம்” என்னும் நூலில் இடம்பெற்றுள்ள செய்தியை எடுத்துக்காட்டுவது ஆகும். இந்நூலில் சாஸ்தா அல்லது சாத்தன் “தேவியின் முலைப்பால்” உண்டு வளர்ந்ததை எடுத்துக்கூறுகிறார்.
பௌத்தக் கோயிலாகிய காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் புத்தர் தேவியின் முலைப்பாலை உண்டார் என்பதையும் சித்தன்னவாசலில் உள்ள சாஸ்தாவாகிய அய்யனார் பால்குடித்தார் என்ற கதையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பால் குடித்தல் என்பது பொதுவாக இருப்பதை அறியமுடிகிறது. மேலும் தமிழ்ப்பௌத்த மரபில் பௌத்த தெய்வங்கள் பால் குடித்தல் பற்றிய கதையாடல்கள் இருப்பதையும் அறியமுடிகிறது. இக்கதையாடல் வடிவம் சாத்தனின் பெயரிலும் அய்யனாரின் பெயரிலும் வழங்குகின்றன என்பதோடு மட்டுமில்லாமல் புத்தர் வாழ்க்கை வரலாற்றிலும் அவ்வாறான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
புத்தர் உலகத்தின் மெய்மையை அறியும் பொருட்டு உருவேலாவில் உண்ணாமல் நீண்டகாலம் கடுந்தவம் மேற்கொண்டார். உண்ணாமல் கடுந்தவம் மேற்கொள்வதால் ஞானத்தை அடையமுடியாது என்பதை உணர்ந்த புத்தர் அத்தவத்தை கைவிடுகிறார். அப்பொழுது புத்தருக்கு “பால்சோறு” வழங்கியவர் சுஜாத என்கிற பெண்மணி ஆவார். இப்பெண்மணி பிற்காலத்தில் பிக்குணியாக மாறினார். இப்பெண்மணி உணவு அளித்த பிறகு புத்தர் ஆற்றல் பெற்றார் என்று கூறும் ஜப்பானிய மருத்துவ மூதறிஞர் மஷாஷி செகாவா தான் எழுதிய “பௌத்தமும் பாலூட்டுதல்” என்ற கட்டுரையில் ஜப்பானின் இடைக்காலத்தில் அதிகரித்து வந்த குழந்தைகளின் இறப்பை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பௌத்தம் மிக முக்கிய கருத்தியல் பங்களிப்பை அளித்ததை எடுத்துக்காட்டுகிறார். இதன் விளைவாக ஜப்பானின் பல பௌத்த விகார்களில் குழந்தைகளுக்குப் பால் கிடைப்பதற்காக வேண்டுதல் நிகழ்த்தப்படுவதாக அவர் விரிவாக எழுதுகிறார். இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது சுஜாதா புத்தருக்கு பால்சோறு ஊட்டியது ஜப்பானின் வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பததைத்தான்.
சுஜாதா புத்தருக்கு பால்சோறு ஊட்டியது ஜப்பானின் வரலாற்றில் ஊட்டச்சத்து சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பதை நினைவில் கொண்டு காமாட்சி லீலாப் பிரபாவம் குறிப்பிடும் செய்தியை அணுகினால், அத்தேவி சுஜாதா என்றும் சாத்தன் புத்தர் என்றும் நாம் விளங்கிக்கொள்ளலாம். பௌத்தத்தில் பால் உண்ணுதல் என்பது ஊட்டச்சத்தின் குறியீடு என்பதை புத்தரின் வரலாற்றிலிருந்து அறியலாம். உணவு உண்ணாமல் கடுந்தவத்தை மேற்கொண்ட புத்தர் தன் வயிற்றில் கையை வைத்தால் தன் முதுகெலும்பைத் தொடுவதாகவும் தன் முதுகெலும்பில் கையை வைத்தால் தன் வயிற்றில் கை இருப்பதாகவும் உணரும் அளவிற்கு அவர் மெலிந்திருந்த நிலையில் அவருக்கு சுஜாதாவால் அளிக்கப்பட்ட பாலுணவு புத்துயிர் பெற்றுவருவது அல்லது ஊட்டச்சத்தின் குறியீடாகவே ஜப்பானின் வரலாற்றில் இருந்ததை நாம் அறியலாம். இது போல சித்தன்னவாசலில் உள்ள பால்குடிக்கும் அய்யனார் என்பது பௌத்த மரபில் ஒரு வளமையான அல்லது செழிப்பான குறியீடாக புரிந்துகொள்ளலாம். மேலும் புத்தர் பற்றிய கதையாடலை அவர்களின் நினைவில் வேறுவடிவத்தில் பௌத்த அய்யனாரின் பெயரில் வைத்திருந்தனர் என்று விளங்கிக்கொள்வதில் மாபெரும் பௌத்த கதையாடலே அடங்கியிருப்பதை புரிந்துகொள்வதற்கு நிகரானதாகும்.
குன்றுக்கு மேற்குத்திசையில் இன்றைக்கு அமைந்துள்ள பூங்கா இருக்கும் இடத்தில்தான் சித்தன்னவாசல் மக்களின் பூர்வகுடிகள் வாழ்ந்துள்ளனர். இடைக்காலத்தில் ஆவுடையார் கோயிலில் இருந்து இவ்வூரில் இல்லாத சாதியொன்றாகிய பிள்ளை சாதியிலிருந்து ஒருவரை இவ்வூரில் நியமித்துள்ளதாக இவ்வூரார் கூறுகின்றனர். இவ்வூர் பாரம்பரியமாக பௌத்த அடையாளத்தையும் தமிழ்ச் சமண அடையாளத்தையும் சுமந்து வந்த ஊர் என்றால், இவ்வூரில் வாழ்ந்த பௌத்தர்களையும் சமணர்களையும் அழித்தது யார் என்ற கேள்வி மிக முக்கியமானதாகும். இவ்வூரில் சம்மந்தமில்லாத பிள்ளைசாதியை சார்ந்த ஒருவரை சைவத்தின் பிரதிநிதியாக நியமித்தது என்பது பௌத்த, சமணத்தை அழிப்பதன் முதல்கட்ட வேலையாகும் என்று யூகிக்கலாம்.
சித்தன்னவாசலில் பௌத்தர்களும் தமிழ்ச் சமணர்களும் பூர்விகமாக இருந்துவந்தனர் என்பதற்கு பால்குடிக்கும் அய்யனாரின் சிலை, சமணர்களின் சிலைகள், பௌத்தப்பள்ளி, மக்களின் மனதில் இருக்கும் வரலாறு யாவும் சான்றுகளாக உள்ளன.
இப்பொழுதும் பால்குடிக்கும் அய்யனாருக்கு நிகழ்த்தப்படும் விழாவில் மிக முக்கியமான நிகழ்வு இங்குள்ள சிறியமலையை முழுவதும் சுற்றிவருவதாகும். இது ஆதிகாலத்திலிருந்தே பின்பற்றப்படும் நிகழ்வாகும். இதை அடிப்படையாக கொண்டு பார்த்தால் இங்குள்ள குகைபள்ளியை பௌத்த துறவிகளும் தமிழ்ச் சமணத் துறவிகளும் பொதுவாக பயன்படுத்தியுள்ளனர் என்றும் கூறலாம்.
இதுவரை எந்த ஆய்வாளர்களாலும் கவனப்படுத்தப்படாத சித்தன்னவாசல் பால்குடிக்கும் அய்யனாரின் சிலை பௌத்தத்தின் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை கதையாடலின் மூலம் சுமந்திருப்பதோடு மட்டும் இல்லாமல் சித்தன்னவாசலுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே உள்ள பலமான உறவை தாங்கிநிற்கக் கூடிய ஒரு பௌத்த அய்யனார் சிலையாகவும் அது நிற்கிறது என்பது மறுக்கமுடியாத வரலாற்று உணமையாகும்.
பால்குடிக்கும் அய்யனார் பௌத்த வரலாற்றில் செழிப்பின் குறியீடாகும்!
படம் – சித்தன்னவாசல் பால்குடிக்கு அய்யனார்

This is an example post, originally published as part of Blogging University. Enroll in one of our ten programs, and start your blog right.
You’re going to publish a post today. Don’t worry about how your blog looks. Don’t worry if you haven’t given it a name yet, or you’re feeling overwhelmed. Just click the “New Post” button, and tell us why you’re here.
Why do this?
The post can be short or long, a personal intro to your life or a bloggy mission statement, a manifesto for the future or a simple outline of your the types of things you hope to publish.
To help you get started, here are a few questions:
You’re not locked into any of this; one of the wonderful things about blogs is how they constantly evolve as we learn, grow, and interact with one another — but it’s good to know where and why you started, and articulating your goals may just give you a few other post ideas.
Can’t think how to get started? Just write the first thing that pops into your head. Anne Lamott, author of a book on writing we love, says that you need to give yourself permission to write a “crappy first draft”. Anne makes a great point — just start writing, and worry about editing it later.
When you’re ready to publish, give your post three to five tags that describe your blog’s focus — writing, photography, fiction, parenting, food, cars, movies, sports, whatever. These tags will help others who care about your topics find you in the Reader. Make sure one of the tags is “zerotohero,” so other new bloggers can find you, too.