ஏரிக்கு ஒரு பிடாரி ஊருக்கு ஒரு அய்யனார்


இப்பழமொழி பௌத்தத் தெய்வமான பிடாரியை ஏரியின் காவல் தெய்வமாக கூறுவது கவனத்திற்குரியதோடு விழுப்புரம் அருகில் உள்ள பிடாகம் என்னும் ஊரில் வழங்கும் “மழை பெய்தால் தடாகம் இல்லை என்றால் பிடாகம்” என்கிற பழமொழியை நினைவூட்டுகிறது. விழுப்புர பிடாகத்து பழமொழி பிடாரி மழைத்தெய்வம் என்பதை கூறுகிறது. ஏரி என்கிற நீர்நிலையைக் காக்கும் தெய்வமாக பிடாரி செயல்படுகிறாள்.

ஏரிக்கு ஒரு பிடாரி ஊருக்கு ஒரு அய்யனார் என்ற பழபொழியில் பிடாரி, அய்யனார் என்ற இரு தெய்வங்கள் இடம்பெறுகின்றன என்றாலும் ஏரியைக் காக்கும், மழை வெள்ளத்திலிருந்து காக்கும் பிடாரியின் வேலை அய்யனாருக்கும் உண்டு என்பதை நாம் அறிகிறோம்.

அதாவது ஏரியின் தெய்வமாக அல்லது நீர்நிலைகளின் தெய்வமாக அய்யனார் விளங்குகிறார். திருவெண்ணெய் நல்லூரில் அய்யனாருக்கு ஏரிக்கரை அய்யனார் என்றே வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுனைகாத்த அய்யனார் உண்டு. விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்கூடலில் இவர் வெள்ளங்காத்த அய்யனார் என்றே அழைக்கப்படுகிறார். அய்யனார் பொதுவாக நீர்நிலைகள் ஓரம் அமைக்கப்பட்டிருப்பதை தமிழம அறிந்த ஒன்றுதான். போர்வீரனாகவும் காவல் தெய்வமாகவும் விளங்கிய அய்யனார் மணிமேகலை காப்பியம் கூறும் பகவான் இந்திரனைப் போல நீர்த்தெய்வமாக விளங்குகிறது.

படம் – வெள்ளங்காத்த அய்யனார், இடம் – விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்கூடல்

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started